Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோலாகலமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கலாசார விழா!

In இலங்கை
Updated: 09:27 GMT, Dec 15, 2017 | Published: 06:02 GMT, Dec 15, 2017 |
0 Comments
1178
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு மாவட்ட கலாசார விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

மாவட்ட கலாசார பேரவையில் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

முன்னதாக முல்லைத்தீவு நகர் பகுதியில் ஆரம்பமான கலாசார பேரணி பறை, மங்கள வாத்தியம், கோலாட்டம், குடமூதல், குதிரையாட்டம் , உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை அம்சங்களோடும் கலாசார ஊர்தி பவனியோடும் மாவட்ட செயலக மண்டபத்தை வந்தடைந்து அங்கு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜக்கிய நாடுகள் சபையின் மேற்கு ஆபிரிக்காவுக்கான நிபுணத்துவ முகாமையாளர் திரு விஜயகுமார் நவநீதன் மற்றும் பிரதேச செயலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த கந்தேவத்த உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலை ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

fg fb

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg