Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேருந்து- ரயிலில் மோதி விபத்து: நான்கு மாணவர்கள் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 07:39 GMT, Dec 15, 2017 | Published: 07:39 GMT, Dec 15, 2017 |
0 Comments
1118
This post was written by : Risha

பிரான்சின் தென் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று ரயிலில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்ததுடன், 12 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரான்சிலிருந்து 850 கிலோமீற்றர் தொலைவில் விபத்து நேர்ந்த பகுதியை பிரதமர் நேரில் பார்வையிடவுள்ளார்.

விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg