Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய நெருக்கடிக்கு பொருளாதார ரீதியிலான அழுத்தமே தீர்வு: பிரித்தானியா

In
Updated: 08:35 GMT, Dec 15, 2017 | Published: 08:35 GMT, Dec 15, 2017 |
0 Comments
1293
This post was written by : Risha

வடகொரிய நெருக்கடியை தீர்ப்பதற்கு சிறந்த வழி வடகொரிய அரசின் மீது பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்துவதே என வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன்; தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஜப்பான் அமைச்சர்களுடன் கூட்டாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் முதலில் கருத்து தெரிவித்த ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்இ ”சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கிய அச்சுறுத்தலாக வடகொரியா விளங்குகிறது. அணு ஆயுதமயமாக்கப்பட்ட ஒரு வடகொரியாவை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்தவகையில்இ வடகொரியா மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை அதிகப்படுத்த ஜப்பானும்இ பிரித்தானியாவும் ஒன்றிணைந்து பணியாற்றும்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்இ ”வடகொரிய நெருக்கடியை தீர்ப்பதற்கு சிறந்த வழி வடகொரிய அரசின் மீது பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்துவதே. அதற்கமைய அதனை உரிய முறையில் முதலில் நடைமுறைப்படுத்த வேண்டியது சீனாவாகும்.

வடகொரிய நெருக்கடிக்கு ராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது. எனவே ராஜதந்திர ரீதியிலான தீர்வினை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg