Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீன தலைநகரமாக கிழக்கு ஜெருசலேம்: சீனா ஆதரவு

In உலகம்
Updated: 09:57 GMT, Dec 15, 2017 | Published: 09:57 GMT, Dec 15, 2017 |
0 Comments
2224
This post was written by : Risha

கிழக்கு ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்டு, முழுஇறைமையும் சுதந்திரமும் கொண்ட  பலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதற்கு சீனா ஆதரவளிக்கும்    என  சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனத்தின் தலைநகரமாக கிழக்கு ஜெருசலேமை பிரகடனப்படுத்தும் வகையிலான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் சர்வதேச கருத்தொற்றுமை ஆகியவற்றிற்கு இணங்க ஜெருசலேம் விவகாரத்திற்கு தீர்வு காண நாம் ஆதரவை வழங்குவோம்.

அதன்படி, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட முழுஇறையாண்மையை அனுபவிக்கும் ஒரு சுதந்திரமான பலஸ்தீன அரசை நாங்கள் ஆதரிப்போம்.

அதற்கேற்ப, பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, பலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு விரிவான, நியாயமான மற்றும் உறுதியான தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg