Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச தேயிலை தினம்: இன்றும் கண்ணீரில் நனையும் தோட்ட தொழிலாளர்கள்

In இலங்கை
Updated: 12:30 GMT, Dec 15, 2017 | Published: 12:30 GMT, Dec 15, 2017 |
0 Comments
1116
This post was written by : Anojkiyan

சர்வதேச தேயிலை தினமான இன்று (வெள்ளிக்கிழமை) தோட்ட தொழிலாளர்கள் தங்களது கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்களை பூர்த்தியாகிய போதிலும், தேயிலை செடிகளை நம்பி தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்களுக்கு இன்று பூஜைகள் அல்லது பிராத்தனைகள் செய்வதற்கு கூட விடுமுறை வழங்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏனைய தொழில்களை மேற்கொள்பவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்கின்ற போதிலும், தாம் பாதுகாப்பற்ற ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலோடு, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல், மரம் முறிந்து விழுதல், மின்னல் தாக்குதல், விஷ பாம்பு கடி என பல்வேறுப்பட்ட துன்பங்களோடு தொழிலை மேற்கொண்டு வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கான ஊதியத்தை பெற்றுக்கொள்வதற்கு கூட பல போராட்டங்கள் செய்து கறுப்பு கொடிகளை பிடித்த போதிலும் தமக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் பசி, பட்டினியோடு வேலை செய்தும் உறங்குவதற்கு கூட முறையான வீடுகள் வசதி அற்ற நிலையிலும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அவர்களின் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பின்னடைவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg