Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடிமனான புருவம் பெற ஐந்து டிப்ஸ்!

In
Published: 14:20 GMT, Dec 15, 2017 |
0 Comments
1117
This post was written by : Anojkiyan
eyebrows

வெங்காயத்தை நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றினை புருவம் மீது பூசிவிட்டு தூங்கச் செல்லுங்கள். இவ்வாறு 10 நாட்கள் செய்தால் நல்ல மாற்றம் தெரியும்.

எலுமிச்சைத் தோலை துருவி வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, விட்டமின் ஈ மாத்திரை மற்றும் அரை தேக்கரண்டி காய்ந்த எலுமிச்சை தோல் போன்றவற்றை கலக்கி ஒரு போத்தலில் சேகரித்துக் கொள்ளுங்கள். தினமும் இரவில் இதனை சிறிய பிரஷ் கொண்டு புருவம் மற்றும் கண்ணிமைகளில் தேயுங்கள். விரைவில் மாற்றம் தெரியும்.

வெந்தயத்தை ஊற வைத்து அதனை அரைத்துக் கொள்ளுங்கள். இரவுகளில் இதனை புருவத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்ய மாற்றம் தெரியும்.

இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை சூடு படுத்தி அதில் கருவேப்பிலை பொடியை சேருங்கள். வாசம் பரவியதும், அடுப்பை அணையுங்கள். பின் வெதுவெதுப்பானதும் இதனை புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மறு நாள் கழுவிக் கொள்ளலாம்.

கற்றாழை ஜெல்லை அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஒலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை புருவத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg