Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் துன்புறுத்தலை வேடிக்கையாகக் கருதக்கூடாது : பிரிட்டன் கல்வித்துறை

In
Updated: 14:38 GMT, Dec 15, 2017 | Published: 14:38 GMT, Dec 15, 2017 |
0 Comments
1360
This post was written by : S.K.Guna

பாடசாலைகளில் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறை மேற்கொள்ளப்பட்டால் அவற்றை வேடிக்கையாகக் கருதக்கூடாது என பிரித்தானிய கல்வித்திணைக்களத்தால் புதிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை “வேடிக்கையான பயமுறுத்தல்” எனக்கருதி கவனிக்காமல் விடுவதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கே பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய கல்வித்திணைக்களம் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு வழிகாட்டலுக்கான புதிய பணிப்பினை விடுத்திருக்கின்றது.

18 வயதுக்குட்பட்டோர், ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது சட்டவிரோதமானது என்றும் இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதில் பாடசாலை நிர்வாகங்களுக்கு கடமை உண்டு எனவும் தெரிவித்துள்ள மகளிர் மற்றும் சமத்துவத்துக்கான செயற்குழு, துன்புறுத்தல்கள் பாடசாலைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ நடந்ததாக அறிவிக்கப்படுகின்றபோது தகுந்த நடவடிக்கையினை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பாடசாலைகளில் பெண்பிள்ளைகளைப் பாதுகாத்து சமத்துவத்தினை உறுதிசெய்ய வேண்டுமெனவும் புதியவழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg