Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு என்ன காரணம்?

In இலங்கை
Updated: 16:49 GMT, Dec 15, 2017 | Published: 16:12 GMT, Dec 15, 2017 |
0 Comments
1122
This post was written by : Anojkiyan
Election New_CI

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு இறுதிச் சந்தர்ப்பத்தில் வேட்புமனுக்களை கையளித்தல், உரிய அவதானம் செலுத்தாமை மற்றும் சுபநேரத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய திட்டமிடல் என்பனவே முக்கிய காரணம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக முக்கிய தொகுதிகளில் இம்முறை முன்னணி கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால், ஆறு உள்ளாட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியினால், அம்பாறை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்களும், சில சுயாதீன கட்சிகள் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg