Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சியின் உறுப்பினர்கள் மோதிக்கொள்வது ஆரோக்கியமான விடயம் அல்ல: மாவை

In இலங்கை
Updated: 16:49 GMT, Dec 15, 2017 | Published: 16:49 GMT, Dec 15, 2017 |
0 Comments
1223
This post was written by : Anojkiyan

கட்சியின் உறுப்பினர்கள் மோதிக்கொள்வது ஆரோக்கியமான விடயம் அல்ல என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சாவகச்சேரி அமைப்பாளர் அருந்தவபாலன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) மோதிக் கொண்ட சம்பவம் குறித்து, கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இதுகுறித்து முழுமையாக விசாரிக்கவில்லை. அவர்கள் தொடர்பாக அரசியல் குழு நடவடிக்கை எடுக்கும்” என கூறினார்.

யாழ். மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் தொடர்பான கலந்துரையாடலில், சிறிது குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அலுவலகத்திற்கு வெளியே, தனது கையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் சயந்தன் மீது அருந்தவபாலன் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg