Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரமான பாதையில் ஒன்றிணைய கற்றலோனிய மக்களிடம் கோரிக்கை

In
Published: 05:15 GMT, Dec 16, 2017 |
0 Comments
1079
This post was written by : Suganthini

கற்றலோனியாப் பிராந்தியத்திலுள்ள அனைத்து மக்களையும் சுதந்திரம் நோக்கிய பாதையில் ஒன்றிணையுமாறு, கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) கோரிக்கை விடுத்துள்ளார்.

கற்றலோனியாவில் எதிர்வரும் 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கார்லெஸ் புகிடமொன்டின் கட்சியான JUNTS PER CATALUNYA கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் பார்சிலோனாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.  இதனையிட்டு, பிரஸ்ஸல்ஸிலிருந்து வீடியோ மூலம்  மக்களுக்காக உரையாற்றியபோதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கற்றலோனியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், சுயாதீனமானதொரு அரசாங்கத்தை அமைக்க நாம் விரும்பினால், சுதந்திரமான நாட்டுக்காக நாம் வாக்களிக்க வேண்டும். எனவே, எம்மிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிட்டு சுதந்திரமான நாட்டுக்காக வாக்களிக்க மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg