Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறிஸ்மஸ் சந்தையில் தாக்குதல்: ஒருவருட பூர்த்தியை அனுஷ்டிக்க ஏற்பாடு

In ஐரோப்பா
Updated: 05:40 GMT, Dec 16, 2017 | Published: 05:40 GMT, Dec 16, 2017 |
0 Comments
1294
This post was written by : Suganthini

ஜேர்மனியின் பேர்லின் நகரிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 19ஆம் திகதியுடன் ஒருவருடமாகின்றது. இந்நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒருவருடப் பூர்த்தியை அனுஷ்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் காயமடைந்தவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பதற்கு அதிபர் அங்கேலா மெர்கல் எதிர்பார்த்துள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி பயங்கரவாத அமைப்பொன்று, டிரக் வண்டியொன்றைக் கடத்தி அதன் சாரதியைக் கொலை செய்துவிட்டு, அவ்வாகனத்தால் கிறிஸ்மஸ் சந்தையிலுள்ளவர்கள் மீது மோதித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 11 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 12 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, இதுவரைகாலமும் மூடப்பட்டிருந்த கிறிஸ்மஸ் சந்தை இம்மாத முற்பகுதியில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg