Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கியப்பட்ட சிம்பாவேயைக் கட்டியெழுப்ப புதிய ஜனாதிபதி உறுதிமொழி

In
Updated: 06:22 GMT, Dec 16, 2017 | Published: 06:22 GMT, Dec 16, 2017 |
0 Comments
1236
This post was written by : Suganthini

ஐக்கியப்பட்ட சிம்பாவேயைக் கட்டியெழுப்புவதற்கு எம்மெர்சன் மனங்காகுவா (Emmerson Mnangagwa) உறுதியளித்துள்ளார்.

சனு பி.ஃஎப் கட்சியின் தலைவராகவும் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகவும் இருப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதி எம்மெர்சன் மனங்காகுவா பெற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஹராரேயில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

அம்மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றியபோது, ‘ஐக்கியப்பட்ட சிம்பாவேயைக் கட்டியெழுப்புவதற்கு விரும்புவதுடன், இனம் மற்றும் பழங்குடி மக்கள் சாராமல் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்’ என்றார்.

மேலும், ‘அடுத்த வருடம் சுதந்திரமானதும் நீதியானதும் நிலையானதுமான தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ள நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சி கடினமாக உழைக்க வேண்டும். அத்துடன், ஆளும் கட்சியான சனு பி.ஃஎப் கட்சியானது, சுதந்திரமானதும் நீதியானதும் நம்பகரமானதுமான தேர்தலில் போட்டியிடுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

‘நாட்டில் விவசாயத்துறையைச்  சீரமைத்து விரிவுபடுத்த தமது அரசாங்கம் முயல்கின்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சிம்பாவேயில் புதிய ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டபோதிலும், மார்ச் மாதம் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg