Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு மே 19இல் திருமணம்

In
Published: 07:38 GMT, Dec 16, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் அவரது காதலியான மேகன் மாக்கிலுக்கும் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக, கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

கடந்த நொவம்பர் மாத முற்பகுதியில் இவர்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களின் திருமண அறிவிப்பை ஹரியின் தந்தையான  இளவரசர் சார்ள்ஸ் அறிவித்திருந்தார். இருப்பினும், அவ்வேளையில் இவர்கள் திருமணம் தொடர்பான திகதி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி, வின்ட்சர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக, கென்சிங்டன் அரண்மனை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் தங்களின் திருமணத்தின் பின்னர், கென்சிங்டன் அரண்மனையிலுள்ள நொட்டிங்ஹாம் மாளிகையில் வசிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg