Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 25 ஆவது நினைவு தினம் இன்று

In இலங்கை
Updated: 07:47 GMT, Dec 16, 2017 | Published: 07:47 GMT, Dec 16, 2017 |
0 Comments
1148
This post was written by : Arul Jesu

வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 25 ஆவது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், பாலச்சந்திரன், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.ஆனந்தசங்கரி மற்றும் சமூக சேவையாளர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0099

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg