Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தை சவாலானது – டஸ்க்

In
Published: 08:39 GMT, Dec 16, 2017 |
0 Comments
1129
This post was written by : Suganthini

அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தை மிகவும் சவாலானதாக அமையுமென, ஐரோப்பிய ஒன்றிய பேரவைத் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் தொடர்பாக, பிரஸ்ஸல்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரெக்சிற் தொடர்பாக, பிரித்தானிய அதிகாரிகளுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். இந்நிலையில், எதிர்கால வர்த்தக உறவில் லண்டன் எதனை விரும்புகின்றதென்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தகவல்களைத் திரட்ட முற்படுமென்பதுடன், அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தை மிகவும் சவாலானதாகவும் அமையும்’ என்றார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத் தலைவர் ஜீன் க்குளோட் ஜங்கர், ‘பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த இலக்குகளை ஒத்துக்கொள்ள எதிர்வரும் மார்ச் மாதம் மாநாடொன்று நடைபெறும்வரையில், எதிர்கால வர்த்தக உறவு தொடர்பாக முழுமையான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படாது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg