Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த சீனாவும் பிரித்தானியாவும் எதிர்பார்ப்பு

In
Updated: 09:50 GMT, Dec 16, 2017 | Published: 09:50 GMT, Dec 16, 2017 |
0 Comments
1245
This post was written by : Suganthini

சீனா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கிடையில், பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, இவ்விரு நாடுகளும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளன.

சீனாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, சீன துணைப் பிரதமர் மா கை (MA KAI) மற்றும் பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் ஆகிய இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரித்தானிய நிதியமைச்சர் ஹேமண்ட், சீன நிதிச் சந்தைகளின் வளர்ச்சியை ஆதரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் காணப்படும் வாய்ப்புத் தொடர்பாக நாம் முக்கியமாக விவாதித்துள்ளோம். எனவே,  பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான பேச்சுவார்த்தை முன்னேற்றமடையுமென்று நான் நம்புகின்றேன்’ என்றார்.

இதேவேளை, சீன துணைப் பிரதமர் தெரிவித்தபோது, ‘பிரெக்சிற்றுக்குப் பின்னர் புதிய அபிவிருத்திகளை முன்னெடுக்க பிரித்தானியா தற்போது திட்டமிட்டு வருகின்றது. இந்நிலையில், அடுத்த கட்டத்துக்கான பாரிய திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg