Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைத்தது ஏன்?அப்பலோவின் தலைவர்!

In இந்தியா
Updated: 10:37 GMT, Dec 16, 2017 | Published: 10:27 GMT, Dec 16, 2017 |
0 Comments
1896
This post was written by : Kemasiya
xdcadc

ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை சட்டம், ஒழுங்கு பிரச்சினை வராமல் இருப்பதற்காகவே மறைத்தோம் என, அப்பலோ வைத்தியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் வைத்து உடகவியலாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணம் தொர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மேற்படி பதில் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

“ஜெயலலிதாவை ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என குறிப்பிட்டிருந்தோம்.

மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காகவுமே அவ்வாறு தெரிவித்தோம்.

தற்போது மரணம் குறித்த விசாரணை இடம்பெற்று வருகின்றது. அதற்காக எமது வைத்தியசாலை வைத்தியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை” என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg