கையடக்க தொலைபேசிகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி போன்ற மின்னனு சாதனங்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்துள்ளதாக, அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தி, உள்நாட்டு தொழிற்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, ஐ-போன் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி மற்றும் மின்னனு சாதனங்களுக்கான இறக்குமதி வரியானது 10இலிருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தொழிற்துறை தளத்தை விரிவுபடுத்துவதற்கான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஊடாக, மின்னனு சாதனங்களின் உற்பத்திகளும் இந்தியாவில் வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.