Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் மொட்டு வெகுசீக்கிரத்தில் கருகும் – அமரவீர

In இலங்கை
Updated: 17:24 GMT, Dec 16, 2017 | Published: 10:37 GMT, Dec 16, 2017 |
0 Comments
1217
This post was written by : Arul Jesu
amarwee-01

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மேலும் சக்திமயப்படுத்தப்பட்டு முன்னோக்கி பயணிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த தரப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகள் மிக வெளிபடையாக செயற்பட்டதாக கூறினார்.

ஆனால் அவர்கள் அந்த வெளிப்படைத்தன்மையை எமது இயலாமை என கருதியதாகவும் அவர் கூறினார்.

எனவே தற்போது ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாகியுள்ள புதிய கட்சி ஒருபோதும் நிலைத்து நிற்காது எனவும், அது வெகுவிரைவில் காணாமல் போவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டை பிரிப்பதாகவும், புலிகள் அமைப்பு மீள் உருவாக்கம் பெறுவதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது அதற்கு எதிராக அரசாங்கம் குரல் கொடுக்க தவறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg