Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.மாகாணசபையுடன் மத்திய அரசாங்கம் இணைந்து செயற்படவில்லை: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

In இலங்கை
Published: 11:58 GMT, Dec 16, 2017 |
0 Comments
1232
This post was written by : Ravivarman

வட.மாகாணசபையுடன் மத்திய அரசாங்கம் இணைந்து செயற்படவில்லை என வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வட.மாகாணசபையின் காணி அமைச்சு இன்று (சனிக்கிழமை) நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய கூட்டத்தில் வட.மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன. இதற்குப் பல திணைக்களத் தலைவர்கள் மற்றும் காணி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். தொல்பொருட் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனவளத்திணைக்களம் ஆகியவற்றில் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து நாம் ஆராய்ந்திருந்தோம்.

எனினும் இக்கூட்டத்திற்கு மத்திய அரசாங்கத்தினைச் சேர்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் எவரும் சமூகமளிக்கவில்லை. அவர்களுக்கு மேற்படி கூட்டத்திற்கு வருவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என அறியக்கிடைத்தது.

இதன்மூலம் மத்திய அரசாங்கம் வட.மாகாணசபையுடன் இணைந்து செயற்பட விரும்பாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது. எனினும் எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்” என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg