Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் அடை மழை: மூவர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 12:00 GMT, Dec 16, 2017 | Published: 12:00 GMT, Dec 16, 2017 |
0 Comments
1326
This post was written by : Suganthini

பிலிப்பைன்ஸில் கடும் காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில், 2 வயதுச் சிறுவனொருவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து பொதுவிடங்களில் தங்கியுள்ளதாக, அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்துவரும் நிலையில், பாரிய வெள்ளப்பெருக்குடன், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், காய் டக்   (Kai-Tak) எனும் சூறாவளி இன்று (சனிக்கிழமை) வீசியுள்ளது. மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் இச்சூறாவளி பலமாக வீசியுள்ளதாகவும், அந்நிலையம் கூறியுள்ளது.

மேலும், இச்சூறாவளி நகரும்போது பல பகுதிகளைத் தாக்கக்கூடுமெனவும், அந்நிலையம் எச்சரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg