Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு புதிய தலைவர்!

In
Published: 12:25 GMT, Dec 16, 2017 |
0 Comments
1134
This post was written by : Suganthini

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷுமாவுக்கு அடுத்ததாக, புதிய கட்சித் தலைவரைத் தெரிவுசெய்ய தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தாயாராகி வருகின்றது.

தற்போதைய துணை ஜனாதிபதி சிரில் ராமபோசா மற்றும்  முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி ஷுமாவின் முன்னாள் மனைவியுமான நொக்காசன டலாமினி ஷுமா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் வெற்றியடைபவர், ஷுமாவுக்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகலாமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இவர்களின் கசப்பான தலைமைத்துவப் போரால், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னராக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடையலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.

இதேவேளை, ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள 4 நாள் கூட்டத்துக்கான பிரதிநிதிகள் ஒன்றுகூடியுள்ளனர். வெற்றியாளர் பின்னணியில் கட்சி ஒன்றுபட வேண்டுமென, பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ஜனாதிபதி ஷுமா வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும்வரை, ஜனாதிபதியாக ஷுமா பதவி வகிக்கமுடியும். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஷுமா ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகின்றார். இருப்பினும், அந்நாட்டில் ஐந்தாண்டுகளைக் கொண்ட ஜனாதிபதிப் பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் வகிக்க முடியாது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg