Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் பொருளாதார முகவர் கைது

In
Published: 04:38 GMT, Dec 17, 2017 |
0 Comments
1259
This post was written by : Suganthini

வடகொரியாவுக்கு பொருளாதார முகவராகச் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கைதுசெய்துள்ளதாக,  அவுஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் நிலக்கரி ஏற்றுமதிக்கு உதவியமை மற்றும் கறுப்புச் சந்தையில் ஏவுகணை உபகரணங்களை விற்பனை செய்வதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 59 வயதான சந்தேக நபரை நேற்று கைதுசெய்துள்ளதாகவும்,  பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சந்தேக நபரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதையடுத்து கருத்து வெளியிட்ட அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல், ‘பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளும் வடகொரியாவின் செயற்பாடுகள் பாரிய ஆபத்தாகக் காணப்படுகின்றது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg