Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட் விளையாடும் போதே இளம் வீரர் உயிரிழப்பு!

In கிாிக்கட்
Published: 07:17 GMT, Dec 17, 2017 |
0 Comments
1712
This post was written by : Puvanes
cricket001

கேரளாவில் உள்ளூர் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பின் காரணமான உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) கேரளாவின் கசர்கோட் பகுதியில் உள்ள பள்ளி மைதானம் ஒன்றில் குறித்த தொடருக்கான போட்டி நடைபெற்றுள்ளது.

இதன்போது போட்டியில் பந்து வீசிக்கொண்டிருந்த பத்மநாபா எனப்படும் 20 வயது வீரர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இடைநடுவிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த வீரரருக்கு மாரடைப்பு ஏற்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

குறித்த சம்பவம் காரணமாக நடைபெற்றுக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடர் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, தொடரில் பங்குபற்றிய ஏனைய வீரர்களுக்கிடையில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg