Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை

In
Published: 09:37 GMT, Dec 17, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Suganthini
wels

வேல்ஸில் இளைஞர்களுக்கான வீடில்லாப் பிரச்சினை, எதிர்வரும் 10 வருடங்களுக்குள் தீர்க்கப்பட்டு விடுமென, வேல்ஸின் முதலமைச்சர்  கார்வின் ஜோன்ஸ்   (Carwyn Jones)  தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் நோக்கில், புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு நிரந்தரமாக வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் வீட்டுத்திட்டச் சங்கங்கள், முகவர் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கையில் வேல்ஸ் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், வீடற்றோருக்கு உதவும் வகையில், மேலதிகமாக 10 மில்லியன் பவுண்ட் நிதியுதவிக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   25 வயதுக்குட்பட்ட 7 ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு வருடமும்  வீடில்லா பிரச்சினை தீர்க்கப்படுமெனவும், அவர் கூறியுள்ளார். .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg