Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கு இலகுவான ஐந்து வழிகள்!

In
Updated: 10:50 GMT, Dec 17, 2017 | Published: 10:15 GMT, Dec 17, 2017 |
0 Comments
1331
This post was written by : Kemasiya
dsfs

சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியின் அளவு அதிகரித்துக் காணப்படும். இந்த முடியை அகற்றுவதற்கு நூல் கொண்டு (த்ரெட்னிங்) அகற்றுவதோ அல்லது ப்ளேற் பாவிப்பதோ சிறந்த முறையன்று.

எனவே முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கு இலகுவான ஐந்து முறைகளை நோக்கலாம்

1-மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

2- பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

3- கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

4- சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

5- குப்பைமேனி இலையை தினமும் சாறு எடுத்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

 மஞ்சள் தூள், கடலைமாவு இரண்டையும் சமஅளவில் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி அப்படியே காயவிடுங்கள்.

நன்றாக காய்ந்த பின்னர் முடி முளைத்திருக்கும் திசைக்கு எதிர்திசையாக கையால் மெதுவாக சுரண்டி எடுக்க வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக கழுவி விடவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg