Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோமேனிய மன்னருக்கு இறுதி மரியாதை

In
Published: 11:11 GMT, Dec 17, 2017 |
0 Comments
1123
This post was written by : Suganthini

ரோமேனியாவின் மன்னராகப் பதவி வகித்துவந்த மைக்கேலின் (Michael I) பூதவுடல், பலரின் இறுதி மரியாதைக்கு மத்தியில் நேற்று (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரோமேனியாவின் மன்னராகப் பதவி வகித்துவந்தவரும் பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் உறவினருமான மைக்கேல்,   கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புற்றுநோயால் அவதியுற்றுவந்த நிலையில்,    தனது 96ஆவது வயதில்  சுவிற்ஸர்லாந்தில்    இம்மாதம் 5ஆம் திகதி இயற்கை எய்தினார்.

ரோமேனியாவின் தலைநகரில் ஒன்றுகூடிய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், மன்னருக்கு தமது இறுதி மரியாதை செலுத்தியதுடன், இவரது இறுதிச்சடங்கில் ஸ்பெய்னின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் மைத்துனரான இவர், ரோமேனியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு ரோமேனியாவிலிருந்து வெளியேறி மேற்கத்தேய நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தார்.

ரோமேனியாவில் மன்னராட்சி கம்பியூனிஸ்ட் அரசாங்கத்தால் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னராக, 1927ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டுவரையும் 1940ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரையும் இரு தடவைகள் மன்னராக இவர் இருந்துள்ளார்.

ro4
ro 2
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg