Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொள்ளையிட்ட பணத்தை வாக்குகளுக்காக கொட்டுகின்றார்கள்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 12:32 GMT, Dec 17, 2017 | Published: 11:17 GMT, Dec 17, 2017 |
0 Comments
1203
This post was written by : Puvanes
staslin001

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் உண்மையான உடல்நிலையை மறைத்தது தமிழக முதல்வர் பழனிசாமியும், பன்னீர் செல்வமுமே என தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம், டி.டி.வி தினகரன் ஆகிய மூவரும் சேர்ந்தே ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது சசிகலாவுடன் இணைந்து கொண்டு பொதுமக்களுக்கு உண்மைகளை மறைத்தார்கள்.

கடந்த காலத்தில் ஒருவருக்கொருவர் ஆதரித்துக் கொண்டார்கள் இப்போது ஒருவருக்கொருவர் துரோகிகளாக வர்ணித்துக் கொள்கின்றார்கள். இவர்களின் கூட்டு துரோகம் காரணமாகவே இன்றுவரை ஜெயலலிதா மரணம் மர்மமாக நீடிக்கின்றது.

முதல்வர் பழனிசாமியும் அப்போது “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை, விசாரணை தேவையில்லை” எனக் கூறியவரே. ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலாவால் பதவி பெற்ற ஓ.பி.எஸ் அதன் பின்னர் சசிகலாவால் தன் பதவி போய்விடும் என்பதற்காக போலியாக தர்மயுத்த நாடகம் நடத்தினார்.

இப்போது ஜெயலலிதாவின் படத்தை காட்டி அனைவரும் வாக்குகளை சேமித்து வருகின்றவர்களே ஜெயலலிதாவின் மரண மர்மத்திற்கு துணையாக நின்றவர்கள்.

தற்போது கோடிகோடியாய் கொள்ளையடித்த பணத்தினைக் கொண்டு வாக்குகளுக்கு விலைபேசி வருகின்றார்கள். கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம் வாக்குகளுக்கு பணம் கொடுக்கப்பட்டமையே. அதேபோன்றதொரு நிலையே தற்போதும் உருவாக்கப்பட்டு வருவதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg