Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடுக்கடலில் போராடிய இலங்கை மீனவர் ராமேஸ்வரம் மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்!

In இந்தியா
Published: 12:03 GMT, Dec 17, 2017 |
0 Comments
1414
This post was written by : Puvanes

நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர் ஒருவர் ராமேஸ்வரம் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மண்டபம் பொலிஸாரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மன்னாரைச் சேர்ந்த மரியதாஸ் எனப்படும் மீனவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மன்னார் அருகே உள்ள பேசாலை துறைமுகத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை) மரியதாஸ் (வயது 38) அன்ட்ரன் (வயது 40) ஆகிய இரு மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடலில் ஏற்பட்ட சுழல்காற்றில் சிக்குண்ட இவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து உயிருக்கு போராடிய அவர்களில் மரியதாஸ் என்பவரை கச்சத்தீவுக்கும், மன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகன், மைக்கல், சேதுபாண்டி தாமஸ் ஆகிய ஜந்து மீனவர்கள் இணைந்து இன்று அதிகாலை காப்பாற்றியுள்ளனர்.

அதேசமயம் படகு மூழ்கியதால் காணாமல் போன அன்ட்ரன் எனப்படும் மீனவரை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக தேடவில்லை என ராமேஸ்வர மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் மீட்கப்பட்ட மரியதாஸ் எனப்படும் மீனவர் மண்டபம் பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

fishmers001 fishmers002 fishmers004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg