Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் இளவயதுத் திருமணம் அதிகரிப்பு!

In இலங்கை
Published: 12:03 GMT, Dec 17, 2017 |
0 Comments
1269
This post was written by : Ravivarman
Medical Officer of Health Kalaiyarasi

மட்டக்களப்பின் கிராமப்புறப் பிரதேசங்களில் இளவயதுத் திருமணமும் இளவயதுக் கர்ப்பந்தரிப்புகளும் அதிகமாக உள்ளதென ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இலவச வைத்திய முகாமில் கலந்து உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் 12.5 என்ற வீதத்தில் இளவயதுத் திருமணம் அதிகமாகி இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமப் புறங்களில் இளவயதுத் திருமண வீதம் அதிகமாகவுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

இளவதில் வறுமை, கல்வியறிவின்மை, தாய்மார் சிறுமிகளை பராமரிப்பின்றி விட்டு விட்டு வெளிநாடு செல்லுதல். வீட்டில் சிறுமிகளுக்குப் பாதுகாப்பின்மை, ஒரு பெற்றோர் தாயோ தந்தையோ மட்டும் உள்ள பிள்ளைகள், கவனிப்பாரற்ற குடும்பத்திலுள்ள சிறுமிகள் போன்றோரே அதிகளவில் இளவயதுத் திருமணத்திற்கு ஆளாகின்றனர்.

உடலும் உள்ளமும் முதிர்ச்சியடையாத ஒடியாடி விளையாடித் திரிந்து சந்தோசமாக கல்வி கற்கும் கட்டிளமைக் கால கட்டத்தில் திருமணம் செய்வித்து குடும்பப் பொறுப்பையும் பொருளாதாரச் சுமையையும் சிறுமிகள் மீது சுமத்தினால் அது தாங்க முடியாது.

ஒரு பெண்ணின் ஆரோக்கிய நிலையை எடுத்துக் காட்டுவது உடற் திணிவுச் சுட்டி. அது 18.5 என்ற அளவில் இருக்க வேண்டும். அந்த அளவில் இருந்து அது குறைவடைந்தால் பெண்ணின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கொள்ள முடியும்” என சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.

DSC01150 DSC01133 DSC01130

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg