Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க மீது வீண்பழி சுமத்தப்பட்டு வருகின்றது: தம்பிதுரை

In இந்தியா
Updated: 12:32 GMT, Dec 17, 2017 | Published: 12:13 GMT, Dec 17, 2017 |
0 Comments
1281
This post was written by : Puvanes

வாக்குகளுக்காக பணம் பகிர்ந்தளிக்கும் விடயம் தொடர்பாக அ.தி.மு.க மீது வீண்பழி சுமத்தப்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் அதிகாரியைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், அ.தி.மு.க ஆர்.கே.நகரில் அபார வெற்றி பெறும் என்பதனை அறிந்து கொண்ட காரணத்திற்காகவே தற்போது போலி குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையகத்திடம் முறையிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இந்த தேர்தலில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தம்பிதுரை கூறியுள்ளார்.

தற்போது தேர்தல் தொடர்பாக எதிரணியினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது அதனாலேயே போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள் எனக் குறிப்பிட்ட அவர், இவை அனைத்தும் திட்டமிட்ட சதி எனவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இது அம்மாவின் தொகுதி, தொடர்ச்சியாக அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதி இங்கு ஏன் நாம் வாக்குகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட தம்பிதுரை, எம்மீது உள்ள குற்றச்சாட்டுகளை முடிந்தால் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg