Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸ் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் 26ஆக அதிகரிப்பு

In உலகம்
Published: 12:12 GMT, Dec 17, 2017 |
0 Comments
1125
This post was written by : Suganthini

பிலிப்பைன்ஸில் கடும் காற்றுடன் அடை மழை பெய்துவரும் நிலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், மண்சரிவில் சிக்கி 23 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணி முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும், அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

மத்திய பிலிப்பைன்ஸில் அடை மழை பெய்துவரும் நிலையில், பாரிய வெள்ளப்பெருக்குடன் மண்சரிவு நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. அத்துடன், காய் டக் எனும் சூறாவளியும் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக, சுமார் 87 ஆயிரத்து 700 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பொதுவிடங்களில் தங்கியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg