Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவின் மிகப்பெரிய செல்வந்தர் மர்மமான முறையில் மரணம்!

In கனடா
Updated: 12:31 GMT, Dec 17, 2017 | Published: 12:23 GMT, Dec 17, 2017 |
0 Comments
1236
This post was written by : Puvanes
canada001

உலகின் 7ஆவது இடத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரும் அவர் மனைவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கனடாவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

டொரண்டேவில் வசித்துவந்த மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பேரி ஷெர்மன் என்பவரும் அவர் மனைவி ஹனி ஷெர்மனும் அவர்கள் வீட்டருகே இருந்த வான் ஒன்றில் இருந்து நேற்று சடலங்களான கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் சடலங்கள் போர்வை ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் உயிரிழப்புக்கான காரணங்கள் இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை.

அதேசமயம் இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சூழலும், இறந்துள்ள முறையிலும் சந்தேகங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவமானது டொரண்டேவில் பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்களது மரணத்திற்கு கனேடிய பிரதமர் ரூடோ டுவிட்டர் மூலமாக தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg