Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரான் சந்தையில் பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்பு!

In இலங்கை
Published: 12:26 GMT, Dec 17, 2017 |
0 Comments
1260
This post was written by : Ravivarman
IMG-20171217-WA0001

மட்டக்களப்பு, கிரான் வாரந்த சந்தையில் பாவனைக்குதவாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைப்பழம் என்பன இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிரான் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிரான் வாரந்த சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம் குறிந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அதிகளவான பொதுமக்களும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருவதுண்டு.

இந்நிலையில், குறித்த சந்தையில் தரம் குறைந்த மற்றும் பழுதடைந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச்சுகாதார பரிசோதகர்களான கு.சோமனகாந்தன் மற்றும் த.பகிரதன் ஆகியோர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மேற்படி பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

இதன்போது அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட 20 குலை வாழைப்பழம், அயடீன் கலக்கப்படாத உப்பு 56 பக்கட்டுகள், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த உணவு (பணிஸ்) 80 மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மல்லி 8 கிலோகிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20171217-WA0003 IMG-20171217-WA0002

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg