இறைச்சிக் கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: இருவர் படுகாயம்!

இறைச்சிக் கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரிலிருந்து நேற்று (சனிக்கிழமை) விற்பனைக்காக இறைச்சிக் கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் என்னுமிடத்தில் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேற்படி விபத்தில் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் கை, கால்கள் முறிந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.