Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேயிலைக்கான தடையை நீக்குமாறு புட்டினுக்கு மைத்திரி கடிதம்

In இலங்கை
Updated: 06:13 GMT, Dec 18, 2017 | Published: 02:20 GMT, Dec 18, 2017 |
0 Comments
1106
This post was written by : Arul Jesu
526590740Maithripala-Sirisena-L

இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புட்டினிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்புத்தளை நகரில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற பிரசார தேர்தல்  கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, தேயிலை ஏற்றுமதியில் ஈடுபடும் தனியார் நிறுவனம் ஒன்றே இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும், விசாரணைகளின் பின்னர் அந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல் இந்த விடயம் தொடர்பில் ஆராய அமைச்சர்களான நவீன் திசாநாயக்க மற்றும் ரிஷாட் பதீயுதீன் ஆகியோர் ரஷ்யா நோக்கி புறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg