Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸின் தலைவராக பதவியேற்ற ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம்!

In இந்தியா
Updated: 06:50 GMT, Dec 18, 2017 | Published: 03:19 GMT, Dec 18, 2017 |
0 Comments
1297
This post was written by : Kemasiya
rahul-modi_650_050614052951

ஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நியாயமான முறையில் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என, காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமருக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் மூலமே ராகுல்காந்தி மேற்படி வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கடித்த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“ஓஹி புயலினால் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன் அந்தப்  பகுதிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையின் மீது கவனம் செலுத்தி முன்னுரிமை கொடுத்து அதனைச் சரிசெய்வதுடன் அப் பகுதி மக்களுக்கு வீடு, சுகாதாரம், உரிய கல்வி கிடைக்கப் பிரதமர் ஆகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg