Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாணயத்தாள்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு!

In இலங்கை
Updated: 07:41 GMT, Dec 18, 2017 | Published: 07:34 GMT, Dec 18, 2017 |
0 Comments
1602
This post was written by : Varshini

சேதமடைந்த மற்றும் பேனைகளால் கிறுக்கி மாற்றம் செய்யப்பட்ட நாணயத்தாள்களை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமுடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தற்போது இவ்வாறான நாணயத்தாள்களும் புழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மாற்றிக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பு பேரூந்துகள், புகையிரதங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாணயத்தாள்களில் இவ்வாறு எழுதுதல், வரைதல், முத்திரையிடல் வெட்டுதல் அல்லது சேதப்படுத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கியின் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg