Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா செல்வந்தர்களின் மரணம் திட்டமிட்ட கொலையா? – விசாரணைகள் தீவிரம்

In கனடா
Published: 07:35 GMT, Dec 18, 2017 |
0 Comments
1167
This post was written by : Puvanes
beery001

டொரண்டோவில் வசித்துவந்த மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பேரி ஷெர்மன் என்பவரும் அவர் மனைவி ஹனி ஷெர்மனும் மர்மமான முறையில் உயிரிழந்தமை பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் குறித்த இருவரும் அவர்களது வீட்டருகே இருந்த வேன் ஒன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் தரப்பு கருத்து வழங்கும் போதே இதனைக் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக டொரண்டோ பொலிஸ் அதிகாரி டேவிட் ஹாப்கின்ஸ் கருத்து வெளியிடும் போது, குறித்த மரணங்களில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படாத நிலையில், பேரி ஷெர்மனின் வீட்டை சோதனையிட்ட விஷேட புலனாய்வுப்பிரிவினர் “வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நுழைந்தமைக்கான அடையாளங்களோ அல்லது, அதற்கான தடயங்களோ கிடைக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது குறித்த செல்வந்தரின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு கனடாவின் அரசியல் தலைவர்களும், வர்த்தக முக்கியஸ்தர்களும் அனுதாபங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, பேரி ஷெர்மன் அபொடெக்ஸ் எனப்படும் மிகப்பெரிய மருந்து உற்பத்தி உரிமையாளர் என்பதும், அந்த நிறுவனத்தில் 11000 இற்றும் அதிகமானோர் பணியாற்றி வருவதோடு, 45இற்கும் அதிகமான நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரணத்திற்கான காரணங்கள் தெரியாத நிலையில், இந்த மரணங்கள் திட்டமிட்ட கொலையாக இருக்கவேண்டும் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் தீவிரமான ஈடுபட்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg