‘இமைக்கா நொடிகள்’ பெப்ரவரியில் வெளியீடு!

அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதேவேளை, இப்படத்தில் பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.
ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.