Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கும் மலேஷியாவிற்கும் இடையில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து

In இலங்கை
Updated: 09:02 GMT, Dec 18, 2017 | Published: 09:02 GMT, Dec 18, 2017 |
0 Comments
1241
This post was written by : Arul Jesu

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், விஞ்ஞானம் தொழில்நுட்பம் புத்தாக்கம் உயிரியல் பொருளாதார அபிவிருத்தி, இராஜதந்திர அதிகாரிகளைப் பயிற்றுவித்தல் போன்ற மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் மலேசிய பிரதமருக்கு ஜனாதிபதி சார்பில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன், 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் அவரது பாரியார் சகிதம் நேற்று காலை இலங்கையை வந்தடைந்தார்.

மலேஷிய பிரதமருடன் 30 பேரை கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகைதந்துள்ள மலேஷிய பிரதமர் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

01_8 11ppppppppppppp 14 ppppppppppppppppppp

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg