Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கும் அரவிந்த் சாமி!

In சினிமா
Updated: 10:18 GMT, Dec 18, 2017 | Published: 09:13 GMT, Dec 18, 2017 |
0 Comments
1167
This post was written by : Risha
ks-ravikumar-and-arvind-swamy-to-team-up-

நடிகர் அரவிந்த் சாமி  அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அக்ஷன் படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்,  இத்திரைப்படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் தனிஒருவன் படத்தில் அசத்திய அரவிந்த் சாமிக்கு, தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தன. அதன்படி, ‘சதுரங்கவேட்டை 2′, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘நரகாசூரன்’ என அவரது படங்களின் பட்டியல் நீண்டுச் செல்கிறது.

இத்திரைப்படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக செல்வா இயக்கத்தில் ‘வணங்காமுடி’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  இப்படத்திற்கு அடுத்ததாக  அரவிந்த் சாமி கே.எஸ்.ரவிக்குமாருடன்  கைகோர்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg