Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை!

In இந்தியா
Published: 09:17 GMT, Dec 18, 2017 |
0 Comments
1120
This post was written by : Surenth
Election001

ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே நகர் தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொடுத்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜ கோபாலனிடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், ஆர்.கே. நகர் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

மேலும், தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது, பாதுகாப்புத்துறையின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg