Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யா மீதான தாக்குதல் தடுத்துநிறுத்தம்: அமெரிக்கா உதவி

In
Updated: 09:36 GMT, Dec 18, 2017 | Published: 09:36 GMT, Dec 18, 2017 |
0 Comments
1107
This post was written by : Suganthini

ரஷ்யாவின் சென். பீட்டர்ஸ்பர்கிலுள்ள கஸன் கதீட்ரல் தேவாலயம் மீது நடக்கவிருந்த பயங்கரவாதத் தாக்குதல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் தகவலால் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை தொடர்புகொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இதற்கு நன்றி தெரிவித்ததாக வெள்ளை மாளிகை மற்றும் கிரம்ளின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேற்படி தேவாலயத்தின் மீது   நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும்,  இத்தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில்,  இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த 7 பேரைக் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும், ரஷ்யா தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு முன்னராக பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டதால், பலர் உயிர் பிழைத்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg