Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேற்றுக்கிரக ரகசிய ஆய்வுகளை நடத்தினோம் : அமெரிக்கா பாதுகாப்புத்துறை

In அறிவியல்
Updated: 11:17 GMT, Dec 18, 2017 | Published: 10:42 GMT, Dec 18, 2017 |
0 Comments
1747
This post was written by : Puvanes

வேற்றுக்கிரகவாசிகளையும், விண்ணில் பறக்கும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் (UFO) பற்றியும் ரகசியமாக ஆய்வு நடத்திவந்தோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்பு கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பென்டகனானது நீண்டகாலமாக பல்வேறு ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.  குறிப்பாக வேற்றுக்கிரக ஆய்வுகளுக்கு பென்டகன் விஷேட முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டு வந்தன.

எனினும் இதுவரையிலும் இதன் உண்மைத்தன்மை தொடர்பாக மேலதிக செய்திகள் வெளிவரவில்லை.

இந்தநிலையில், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையிலும் சந்தேகத்திற்கிடமான வான் நிகழ்வுகள் தொடர்பில் 20 மில்லியன் டொலர்கள் செலவில் ஆய்வுகளை நடத்திவந்தோம் என ஓய்வு பெற்ற பென்டகன் அதிகாரியான செனட்டர் ஹேரி ரீட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு தொடர்பான விடயங்களை ஒருசில அதிகாரிகள் மட்டுமே அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்தக்கருத்துகளைத் தொடர்ந்து 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன என்ற கேள்விகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மில்லியன் டொலர்களை செலவுசெய்து அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்டவிடயத்தினை அமெரிக்கா இதுவரையிலும்   ஏன் வெளிப்படுத்தவில்லை எனவும் சில ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் பென்டகன் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான   ரசியங்களை ஆவணப்படுத்தி வைத்துள்ளதாகவே பலஆய்வாளர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்தகைய ஆய்வின் அறிக்கைகள் வெளிப்படுத்தப்டுமாயின் பலஉண்மைகளும் மர்மங்களும் வெளிப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg