Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் புகையிரத கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞன் படுகாயம்!

In இலங்கை
Updated: 11:51 GMT, Dec 18, 2017 | Published: 11:01 GMT, Dec 18, 2017 |
0 Comments
1268
This post was written by : Ravivarman

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தின் போது இதில் பயணித்த 25 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈரப்பெரியகுளம், அவுசப்பிட்டிய பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகையிரதப் பாதையில் இருந்த கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது தூக்கி வீசப்பட்ட மோட்டர் சைக்கிள் இரண்டாக உடைவுற்ற நிலையில் முன்னே சென்ற காருடன் மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே குறித்த மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Vavuniya 11 Vavuniya 07 Vavuniya 05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg