Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களை பிரித்தாள சதி – பின்னணியில் பல சக்திகள்! – சிறிதரன் சாடல்

In இலங்கை
Updated: 11:23 GMT, Dec 18, 2017 | Published: 11:23 GMT, Dec 18, 2017 |
0 Comments
1471
This post was written by : Varshini

தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, அவர்களுக்கு எதனையும் கிடைக்கவிடாமல் செய்ய பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் பல சக்திகள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய இலக்குகளை நோக்கிய பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திடமாக உள்ளதென குறிப்பிட்ட சிறிதரன், இவ்வாறான நிலையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்கள் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்ட வரலாறுகள் குறைவு. தந்தை செல்வநாயகம் முதல் பிரபாகரன் வரை பல இடர்பாடுகள் காணப்பட்டபோதும், விடுதலை நோக்கிய பயணம் வெற்றிகரமாக கொண்டுசெல்லப்பட்டதென சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்த பயணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து செல்கின்ற சந்தர்ப்பத்தில், தங்களுடைய இலக்குகளை வெற்றிகொள்ள முடியாமல் வெளியில் சென்றவர்கள் கூட்டாக மீண்டும் வந்துள்ளார்கள் என சிறிதரன் இதன்போது குறிப்பிட்டார். இவ்வாறானவர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பதில் கூறுமென்றும், எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாரென்றும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg