Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்: பங்குச்சந்தையில் வீழ்ச்சி

In இந்தியா
Updated: 11:36 GMT, Dec 18, 2017 | Published: 11:36 GMT, Dec 18, 2017 |
0 Comments
1142
This post was written by : Surenth

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக பங்குச்சந்தையில் இன்று (திங்கட்கிழமை) சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை நிலைவரம் தொடர்பாக பங்குச் சந்தை நிபுணர் சுனில் ஷா இன்று (திங்கட்கிழமை) சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 32,595.63 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 258 புள்ளிகளுடனும் விற்பனையாகியுள்ளது.

இதேவேளை, சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவு ஏற்பட்டு பின்னர் சற்று நிலைமை சீரடைந்து 100 புள்ளி வரை வீழ்ச்சிடைந்து விற்கப்பட்டுள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியமையே இவ்வாறு வீழ்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என சுனில் ஷா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg