Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர்நிலையிலிருந்து இளைஞனின் சடலம் கண்டெடுப்பு!

In இலங்கை
Updated: 12:03 GMT, Dec 18, 2017 | Published: 11:56 GMT, Dec 18, 2017 |
0 Comments
1186
This post was written by : Ravivarman
1 (2)

மட்டக்களப்பு, புலுட்டுமானோடை எனும் பிரதேசத்திலுள்ள நீர் நிரம்பிய மடுவொன்றிலிருந்து இன்று (திங்கட்கிழமை) சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூர் பொலிஸ்பிரிவு வந்தாறுமூலை, சந்தை வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய சிவலிங்கம் தர்ஷன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 16ஆம் திகதி வந்தாறுமூலையிலுள்ள தனது வீட்டிலிருந்து பறப்பட்டு தனது பண்ணைக்குச் சென்றிருந்ததாகவும், அதன் பின்னர் இன்று பண்ணைப் பகுதியிலுள்ள நீர் நிரம்பிய மடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டதாரியான இவருக்கு அரசாங்கத்தொழில் கிடைக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து கரடியனாறு ஈரலக்குளம் பகுதியிலுள்ள காணிகளில் விவசாயம் செய்து வருவதாகவும் உறவினர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1995ஆம் ஆண்டு வந்தாறுமூலைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் இராணுவத்தினரால் இவரது தாய், தந்தை, தங்கை ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg