Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புலிகளின் முகாம் காணப்பட்ட இடத்தில் பெருந்தொகை கைக்குண்டுகள்

In இலங்கை
Published: 11:55 GMT, Dec 18, 2017 |
0 Comments
2065
This post was written by : Varshini
granite (1)

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இருந்து, ஒரு தொகை கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இவை இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் மீட்கப்பட்டன. தகரப் பேணி ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் 18 கைக்குண்டுகள் இங்கு காணப்பட்டதாக களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.எம்.பி.ஜெயகெலும் தெரிவித்தார்.

கைக்குண்டுகள் காணப்பட்ட காணியானது, முன்னர் விடுதலைப் புலிகளின் முகாமாக காணப்பட்டு பின்னர் கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற உத்தரவினைப் பெற்றுக்கொண்டு, நாளைய தினம் குறித்த கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படுமென களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg